search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாதிர் முகம்மது"

    மலேசியா முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஆட்சியில் நடந்த அனைத்து ஊழல்கள் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் மகாதிர் முகம்மது உத்தரவிட்டுள்ளார். #Mahathir #NajibRazak
    கோலாலம்பூர்:

    மலேசியாவின் புதிய பிரதமராக 92 வயதான மகாதிர் முகம்மது பதவியேற்றுள்ளார். அவர் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இதற்காக புதிய ஊழல் தடுப்பு ஏஜென்சி தலைவர் நியமனம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மகாதிர் முகம்மது, அனைத்து அமைச்சகங்களில் உள்ள ஆவணங்களையும், வெளியே எடுத்துச் செல்ல மற்றும் அழிக்கக்கூடாது.



    முன்னாள் பிரதமர் நஜிப் ராசாக் ஆட்சியில் இருந்த போது மலேசிய ஊழல் தடுப்புக்குழுவின் முன்னாள் தலைவர் அப்துல் ரசாக் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க விடாமல் தடுத்ததாக புகார் எழுந்தது. அப்துல் நசாக் அரசு பணம் 4.5 மில்லியன் டாலர் ஊழல் செய்ததாக் கூறப்பட்டது. அவர் மீது பல புகார்கள் செய்யப்பட்டன. இந்நிலையில், அவர் ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல்கள் குறித்தும் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும்.

    என மகாதிர் முகம்மது கூறினார்.

    கடந்த வாரம் நஜிப் மற்றும் அவரது மனைவி வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல இருப்பதால், அவர் பயணம் செய்ய தடைவிதிக்க வேண்டும் என மகாதிர் முகம்மது கூறினார். #Mahathir #NajibRazak

    மலேசியாவில் பிரதமராக நேற்று பதவியேற்ற மஹாதிர் முகம்மது தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமை விடுவிக்க மன்னரிடம் அனுமதி பெற்றுள்ளார். #MahathirMohamad
    கோலாலம்பூர்:

    மலேசியாவில் நேற்று முன்தினம் நடந்த பொதுத்தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. 92 வயதான மஹாதிர் முகம்மது நேற்று பிரதமராக பொறுப்பேற்றார். இதன் மூலம் உலகின் மிக வயதான பிரதமர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.

    ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ள முன்னாள் துணை பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் மஹாதிர் கூறியிருந்தார். அதன்படி, அன்வரை விடுவிப்பது தொடர்பாக இன்று மஹாதிர் தலைமையில் அந்நாட்டு மன்னர் சுல்தான் முகம்மதுவை சந்தித்து முக்கிய கட்சித்தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அன்வர் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி

    பிரதமர் மஹாதிரின் கோரிக்கையை ஏற்ற மன்னர், அன்வர் இப்ராஹிமுக்கு பொதுமன்னிப்பு வழங்க சம்மதித்துள்ளார். இதனை மஹாதிர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அன்வர் இப்ராஹிமின் மக்கள் நீதி கட்சி மற்றும் மஹாதிரின் பிஎச் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

    அன்வர் இப்ராஹிமின் மனைவி வான் அஸிஸா வான் இஸ்மாயில் துணை பிரதமராக பதவியேற்றுள்ளார். அன்வர் இப்ராஹிம் விரைவில் சிறையிலிருந்து வெளிவரும் பட்சத்தில் முக்கிய பொறுப்பு அவருக்கு அளிக்க மஹாதிர் தயாராக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
    மலேசிய பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அந்நாட்டின் பிரதமராக நேற்று பதவியேற்றுக்கொண்ட மகாதிர் முகமதுவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #Modi #MahathirMohamad
    புது டெல்லி:

    மலேசியாவின் 14வது பாராளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக 60 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து 92 வயதான மகாதிர் முகமது அந்நாட்டின் பிரதமராக நேற்று பதவியேற்றுக்கொண்டார், அவருக்கு டுவிட்டர் வாயிலாக இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    டுவிட்டரில் பிரதமர் மோடி, “மலேசியாவின் பிரதமராக பதவியேற்றுக்கொண்ட  டாக்டர். மகாதிர் முகமதுவிற்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். இரு நாடுகளின் நல்லுறவை பரஸ்பரம் நன்மை பயக்கும் வகையில் மேலும் வலுப்படுத்த டாக்டர். மகாதிருடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். #Modi  #MahathirMohamad
    மலேசிய பாராளுமன்ற தேர்தலில் இன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஆளும் பி.என். கட்சி தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். #MalaysiaElection #rulingcoalitionlead
    கோலாலம்பூர்:

    222 உறுப்பினர்களை கொண்ட மலேசிய பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. பிரதமர் நஜீப் ரஜாக்கின் ஆளும் பி.என்.கட்சிக்கும், முன்னாள் தலைவர் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

    அனல் பறந்த பிரசாரம் முடிவடைந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. அதற்காக அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிகளில் வரிசையில் நின்று பொதுமக்கள் ஓட்டு போட்டனர். மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

    இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற ஒன்றரை கோடி மக்களில் 69 சதவிகிதம் பேர் வாக்களித்தனர். தற்போது வாக்கு எண்ணிக்கை மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆளும் பி.என். கட்சி தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் 54 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

    மலேசியாவின் உள்நாட்டு நேரமாக இன்றிரவு பத்துமணி நிலவரப்படி, மகாதிர் முகமது தலைமையிலான பக்கட்டான் ஹரப்பான் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர்கள் 51 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர் என கோலாலம்பூரில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் மகாதிர் முகம்மது இருவருமே தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், நஜீப் ரசாக் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த போக்குவரத்து துறை மந்திரி லியோவ் டியாங், சுகாதாரத்துறை மந்திரி சுப்பிரமணியம் ஆகியோர் தோல்வி அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    ஆட்சி அமைக்க 112 உறுப்பினர்களின் பலம் தேவை என்னும் நிலையில் இந்த தேர்தலில் பிரதமர் நஜீப்பின் பி.என்.கட்சி நூறுக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும். அதேநேரத்தில் மகாதிர் முகமதுவின் எதிர்க்கட்சி கூட்டணியும் அதிக இடங்களை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #MalaysiaElection #rulingcoalitionlead
    ×